Skip to main content

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்துமா? முதல்வர் நாராயணசாமி பதில்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
narayanasamy


டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரங்கள் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுச்சேரிக்கும் பொருந்தும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். அங்கு அதிகாரிகள் யார் சொல்வதை கேட்பது என்பதில் குழம்பி தவிக்கிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில், யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது? என்பது தொடர்பான வழக்கு நிடித்து வந்தது. இதில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உண்டு என்று டெல்லி உயர்நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
 

 

 

அந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஏ.கே.சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஐ.சந்திரசூட் மற்றும் அஷோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். இதில் துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,

யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்பதை தீர்ப்பு தெளிவுப்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

துணைநிலை ஆளுநர் குறித்து நான் கூறிய கருத்துகள் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. நான் சொன்ன அனைத்தும் வேதவாக்காக தீர்ப்பில் உள்ளது. இந்தத் தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுச்சேரிக்கு பொருந்தும் என்று அவர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்