Skip to main content

வரலாறு காணாத பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ஸ்ரீநகர் விமான  நிலையத்திற்கு வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை காரணமாக ஸ்ரீநகரை இணைக்கும் குரேஷ், மாச்சில், தாங்தார் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பிரதான சாலைகள் பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் ஸ்தம்பித்தன.

பிற்பகலுக்கு பிறகு நிலவும் வானிலை சூழலை பொறுத்து விமான வருகை, புறப்பாடு பற்றி முடிவு செய்யப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடப்பு பருவ காலத்தில் முதல் முறையாக இன்று காலை கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. வெப்ப நிலை உறைநிலைக்கும் கீழ் சென்றதால், மக்கள் கடும் குளிரை உணர்ந்தனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் சிலமணி நேரம் ரத்து செய்யப்பட்டது.  

 

சார்ந்த செய்திகள்