Skip to main content

உதவி ஆய்வாளர் டிராக்டர் ஏற்றிக் கொலை; போலீசார் தீவிர விசாரணை!

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
Police serious investigation for mp Assistant inspector issue 

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சாதோல் மாவட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல் உதவி சார்பு ஆய்வாளர் (ASI -ASSISTANT SUB INSPECTOR) மகேந்திர பக்ரி என்பவர் மணல் மாபியா கும்பலால் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக டிராக்டர் ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் மணல் மாஃபியாவால் ஏஎஸ்ஐ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஷாஹ்டோலின் நௌதியா என்ற இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து போலீஸ் ஏடிஜிபி ஷாதோல், டிசி சாகர் ஆகியோர் கூறுகையில், “ஏஎஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் அவரது குழுவினர் குற்றவாளியை கைது செய்ய வாரண்டுடன் சென்றனர். அங்கு ஏஎஸ்ஐ மகேந்திர பக்ரி டிராக்டர் மூலம் தாக்கப்பட்டார். இந்த டிராக்டரின் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் டிராக்டரின் உரிமையாளரின் மகனும் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு ( I.P.C.- ஐ.பி.சி.) 302/34, 414, 379 மற்றும் பல்வேறு சுரங்கச் செயல்களின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மணல் மாஃபியாவால் ஏ.எஸ்.ஐ. கொல்லப்பட்டது குறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திரா பட்வாரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் குற்றம் மற்றும் ஊழல் தொடர்பான அரசு உள்ளது. என்.சி.ஆர்.பி தரவுகளின்படி மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 17 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நடக்கின்றன, நான் இந்த பிரச்சனைகளை எழுப்பும்போது அவர்கள் பயத்தை ஏற்படுத்த என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்கிறார்கள். காங்கிரஸின் இரத்தம் என்னுள் இருக்கிறது. எனவே நான் பயப்பட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்