Skip to main content

வெற்றிமாறனுடன் கவின் கூட்டணி - பணிகள் தொடக்கம் 

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
kavin joins with vetrimaaran movie titled as mask

லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வளர்ந்து வரும் ஹீரோவாக வலம் வருகிறார் கவின். இதில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படத்தை அடுத்து இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) என்ற தலைப்பில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கவினோடு இணைந்து ஆன்ரியா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் வி.கர்ணன் அசோக் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இப்படத்திற்கு மாஸ்க் எனத் தலைப்பு வைக்கப்படுள்ளது. படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது. பூஜையில் வெற்றிமாறன், கவின் ஆன்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படம் மூலம் வெற்றிமாறன் பேனரில் நான்காவது முறையாக நடிக்கிறார் ஆன்ரியா. இதற்கு முன்னதாக வடசென்னை, அனல் மேலே பனித்துளி, மனுசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் மனுசி படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனை பொறுத்தவரை விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இறுகட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடந்து வருகிறது. மேலும் சூரியின் கருடன் படத்தைத் தயரித்து அதற்கு கதையும் எழுதியுள்ளார். இப்படம் மே 31ஆம் தேதி வெளியாகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

“வாடிவாசல் லிங்குசாமி பண்றதா இருந்தது” - வசந்த பாலன் சுவாரஸ்யம்

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
vasantha balan said lingusamy to direct vaadivaasal

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்த பாலன் இப்போது ‘தலைமைச் செயலகம்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸீன் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரையிலர் அடுத்தடுத்து சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரிஸ் கடந்த 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ் தொடர்பாக நக்கீரன் ஸ்டியோ யூட்யூபில் பேசிய வசந்த பாலன், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது சக இயக்குநர்களோடு படங்கள் குறித்து பேசியது தொடர்பாக பகிர்ந்த வசந்த பாலன், “ஷங்கர், லிங்குசாமி, சசி, வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல் இவங்களோட எப்போதுமே தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பேன். இந்தி சினிமாவுடைய வீழ்ச்சி, கே.ஜி.எஃப்புடைய வெற்றி எனப் பல்வேறு பார்வையில் சினிமாவின் இப்போதைய நிலைகுறித்து விவாதிப்பேன். அதன் மூலம் ஒரு விஷயத்தை கண்டடைய முடியும்.  

பூமணியின் வெக்கை நாவலை நான் படம் பண்ண வேண்டியிருந்தது. ஒரு அப்பா கொலை பண்ண பையனை காப்பாத்த போராடுறாரு, கடைசியில கோர்டுல சரணடைஞ்சிடுவாரு. இதை எப்படி படமா பண்றதுன்னு பண்ணாம விட்டுட்டேன். ஆனால் அசுரன் பார்த்தவுடன் சர்பிரைஸா இருந்துச்சு. நாவலை திரைக்கதையா வெற்றிமாறன் எப்படி அணுகியிருக்கிறார் என்பதைப் பார்த்தேன். 

அடுத்து வாடிவாசல் பண்ண போறார். வாடிவாசல் முதலில் லிங்குசாமி பண்றதா இருந்தது. அப்புறம் நம்ம ட்ரை பண்ணுவோம் எனத் திரைக்கதை அமைக்க முயற்சி செய்தேன். வெறும் ஜல்லிக்கட்டை வைத்து எப்படி திரைக்கதை அமைக்க முடியும் என அப்போது விட்டுவிட்டேன். இன்னைக்கு தமிழ் சினிமா எதிர்பார்க்கிற படமாக அது மாறியிருக்கு. இவ்வாறு தொடர்ந்து இயக்குநர்களுடன் ஃபோனில் படங்கள் குறித்து பல்வேறு விஷங்கள் பேசுவேன்” என்றார்.    

Next Story

“வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்” - பிரதமர் பயோபிக் குறித்த கேள்விக்கு சத்யராஜ் பதில்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
sathyaraj about pm modi bio pic

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். 

அப்போது சத்யராஜிடம், ரஜினியுடன் கூலி படத்தில் நடிக்கிறீர்களா? பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா? பிரதமர் மோடியின் பயோ-பிக்கில் நடிக்கிறீர்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இன்றைக்கு இருக்கிற கார்ப்பரேட் கம்பெனிகளில் ஒவ்வொரு அறிவிப்பையும் அவர்கள் தான் அறிவிக்க வேண்டும். அதற்கு முன்னாடி நான் சொல்லிடக் கூடாது என்பது ஒப்பந்தம். அதனால்தான் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். அதன் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மற்ற கேள்விகளுக்கு அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறி பதில் சொன்னால் நம் மேல் வழக்கு கூட போட்டுவிடுவார்கள். 

மோடி பயோ பிக்கில் நடிக்க யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படியே நடித்தாலும், என்னுடைய நண்பன் மணிவன்னன் போல ஒரு டைரக்டர் எடுத்தால் தத்ரூபமாக இருக்கும். இல்ல விஜய் மில்டன் அப்படியே எடுக்கலாம் என்றாலும் ஓகே. வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மோடி பயோ பிக் எடுத்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.