Skip to main content

மும்பையில் அச்சுறுத்தும் ஒமிக்ரான் - பள்ளிகளை இழுத்துப் பூட்டிய மாநகராட்சி!

Published on 03/01/2022 | Edited on 03/01/2022

 

ெே்ிு


கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 10ம் தேதி அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக இருக்கும் டெல்லியில் கடந்த வாரமே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கேரளா விடுமுறையை அளித்திருந்த நிலையில், தற்போது மேற்குவங்க அரசும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில்  மும்பையில் வரும் 31ம் தேதி வரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முடிந்தது கோடை விடுமுறை; இன்று பள்ளிகள் திறப்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
nn

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட இருக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Department of Education gave good news to students

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 6 ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி (06.06.2024) அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகளைத் திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதில், “பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும். மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேற்கூரைகளில் குப்பைகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஜுன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜுன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.