Skip to main content

7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு: கடம்பூர் ராஜூ

Published on 16/06/2018 | Edited on 16/06/2018


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு என விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் அதிருப்பதி தெரிவித்து வந்த நிலையில், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தனது மகனை கருணை கொலை செய்து விடுங்கள் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

மேலும் மகாத்மா காந்தியை கொன்றவரையே 14 ஆண்டுகளில் விடுதலை செய்துவிட்டனர். ஆனால் தவறே செய்யாத பேரறிவாளன் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருவதாக அற்புதம்மாள் வேதனையுடன் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 7 பேரின் விடுதலை தமிழக அரசின் கொள்கை முடிவு. குடியரசு தலைவர் ஏன் நிராகரித்தர் என்பது பற்றி தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்