A downed electrical wire; Couple dies due to electrocution

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் கனமழையால் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாலையில் காற்றுடன் கனமழை பொழிந்தது வருகிறது. மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் மீனாட்சி தெரு பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். அவருடைய மனைவி பாப்பாத்தி. இருவரும் அந்த பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளனர். வழக்கம்போல கடையைப் பூட்டி விட்டு வீடு திரும்பியபோது சாலையில் அறுந்து தொங்கிய மின்சார வயர் பட்டு இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment