A government school that has achieved even in the absence of basic facilities

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள், சுற்றுச்சுவர், குடிநீர் என அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில் மாணவர்கள் போராடியும் அந்த வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை.

அடிப்படை வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் பள்ளி மாணவ, மாணவிகள் நேரடியாக கொடுத்த மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் சம்பந்தமில்லாத வேறு துறைக்கு அனுப்பி மனுவை முடித்து வைத்துள்ளனர். மாணவர்களின் அடிப்படை வசதிகள் இன்றளவும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் அடிப்படை வசதிகளே இல்லாத மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.

S.தங்கசுபா 471 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் இவர் பெற்ற மதிப்பெண்கள்.. தமிழ்-97,கணிதம் -97, அறிவியல்-96 திப்பெண்கள் பெற்றுள்ளார். C.ஹம்சிகா பேகம் 468 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் ஆங்கிலம் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். R.சிவபாலன் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். மேலும் கணிதபாடத்தில் M.ராஜினி 99, அறிவியல் 96 மதிப்பெண்களும் பெற்று சாதித்துள்ளனர்.

Advertisment

அதேபோல சமூக அறிவியல் பாடத்தில் M.யுகதர்ஷினி 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அடிப்படை வசதி இல்லாத அரசுப் பள்ளியில் இத்தனை மாணவ, மாணவிகள் சாதித்துள்ளதைப் பார்த்து ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டும் பெற்றோர்கள் இன்றும் அடிப்படை வசதிகள் இருந்தால் இவர்கள் மேலும் சாதிப்பார்கள். ஆகவே வரும் கல்வியாண்டில் வது அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்கின்றனர்.