Skip to main content

"கமலின் அந்த படத்தை முப்பது முறை பார்த்தேன்.." ரஜினிகாந்த் சுவாரசிய பேச்சு!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

சென்னையில் உள்ள ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலசந்தரின் சிலையை கமல் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தனக்கும் கமலுக்குமான நட்பையும், திரையுலக பயனணத்தை பற்றியும் விரிவாக பேசினார். அவர் பேசும்போது, " கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல். அழகான, பிரம்மாண்டமான அலுவலகமாக இது இருக்கிறது. கமல் அரசியலுக்கு வந்தால் கூட தாய் வீடான சினிமாவை விட்டுவிட மாட்டார். கமலுக்கு கலை என்பது உயர் போன்றது, எங்கு சென்றாலும் அதை மறக்கவே மாட்டார். ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படத்தை பார்ப்பதற்கு எனக்கு இரவு நேரத்தில்தான் வாய்ப்பு கிடைத்தது. படம் முடிந்தபோது மணி இரண்டு இருக்கும். எனக்கு உடனடியாக கமலை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. என் மனைவியிடம் கூறினேன். இந்த நேரத்தில் அழர் தூங்கிக்கொண்டு இருப்பாரே? இப்போது எப்படி அவரை சந்திப்பது என்று கூறினார்கள். ஆனால் நான் விடாப்பிடியாக அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். நேராக அவரின் வீட்டுக்கு சென்று ரஜினியை சந்தித்து பாராட்டினேன்.
 

df



பிறகு அடுத்த ஐந்து வருடம் கழித்து விக்ரம் படத்தை தயாரித்தார்கள். அவர்கள் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் படம் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார் என்று எனக்கு தெரியும். நான் அதிகமான திரைப்படங்களை எப்போதும் பார்ப்பேன். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை மட்டும் 30 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். கமலின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்களில் அந்த படமும் ஒன்று.  கே.பாலசந்தர் சிலையை திறந்ததை பற்றி என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை. பெரிய மகான் இப்போது நம்முடன் இல்லை. சிலையை பார்க்கும் போது அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது. தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்று கே.பாலசந்தர் என்னிடம் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை  கமல். அவர் மீது அதிகப்படியான பிரியம் வைத்திருப்பார், தூரத்தில் இருந்து கொண்டே கமலை ரசித்துக் கொண்டு இருப்பார். அவருக்கு கமல் தற்போது சிலை திறந்துள்ளார். பழைய விஷயங்களை அவர் மறக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்" என்றார்.