Skip to main content

புதுக்கட்சி "பிக் பாஸ்' ஜூலி பேட்டி!

Published on 18/05/2018 | Edited on 20/05/2018
இது கட்சி தொடங்கும் சீசன். நடிகரும் ரேடியோ ஜாக்கியுமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வருகிறார் எனும் நிலையில்... புதிய கட்சி துவங்கப் போவதாக ஜல்லிக்கட்டு புகழ் "பிக் பாஸ்' ஜூலி தனது டிவ்டரில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவ... "இது வேறயா?'னு சிலர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காதலன் மீது மோசடி புகார்! பிக்பாஸ் ஜூலி அதிரடி!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Fraud complaint against boyfriend! Big Boss Julie Action!

 

ஜல்லிக்கட்டு போராட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் மேலும் புகழ் வெளிச்சம் அவர் மீது பரவியது. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்தார். பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவருகிறார் ஜூலி. 

 

இந்தச் சூழலில், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் ஜூலி. அந்தப் புகாரில், ‘அமைந்தகரையைச் சேர்ந்த மனிஷ், தனியார் சலூன் கடை ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது. 2017 முதல் இருவரும் நெருக்கமாக வாழ்ந்துவந்தோம்.

 

நான்கு ஆண்டுகால காதல் வாழ்க்கையில், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்தார். அந்த நம்பிக்கையின் பேரில் இருசக்கர வாகனம், 2 பவுன் தங்கச் சங்கிலி என கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை மனிஷுக்கு கொடுத்திருக்கிறேன்.

 

இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம், பெற்றோர்கள் இந்தக் காதலை ஏற்க மறுப்பதாகச் சொல்லி காதலை முறித்துக்கொண்டார். நாங்கள் காதலித்த காலத்தில் நடந்ததைச் சொல்லி, என்னிடம் பணம் கேட்டு தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துவருகிறார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், என்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியும், பண மோசடியும் செய்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காதலன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் ஜூலி. 

 

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

 

 

Next Story

ஜல்லிகட்டு ஜூலியின் புது அவதாரம்..!

Published on 18/09/2020 | Edited on 19/09/2020

 

 

jullikattu juli's new transformation

 

பிக்பாஸ் சீசன் நான்கு விரைவில் துவங்கவுள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறும்போது சட்டென்று நினைவுக்கு வருவது ஜல்லிகட்டு ஜூலிதான், ஜல்லிகட்டு போராட்டத்தில் எடுத்த அத்தனை புகழும் பிக்பாஸில் காற்றில் பறந்துவிட்டது. இந்தநிலையில் தனியார் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்தும் அந்தளவு பப்ளிசிட்டி கிடைக்கவில்லை. தொடர்ந்து சினிமா வாய்ப்பு கனவில் இருந்த ஜூலியின் கதாநாயகி கனவும், முழுமையடையவில்லை. 

 

இந்தநிலையில் கரோனா லாக் டவுனில் சினிமா துறையே முடங்கிப்போன நிலையில், சில நடிகைகள் சர்ச்சையை கிளப்பி நாங்கள் இருக்கிறோம் என்று காட்டினார்கள். அதே பாணியில் பிக்பாஸ் ஜூலியும் கடந்த மாத 24மணிநேரத்தில் இந்தியாவில் உள்ள முப்பத்தாறு மாநில கலாச்சார உடை அணிந்து போட்டோ சூட் நடத்தினார்.

 

ஆனால் அதுவும் பலன் தராத நிலையில், தற்போது அமலாபால், அஞ்சலி வரிசையில் லாங் டிரைவ் சைக்கிளிங் பயிற்சியில் இறங்கியுள்ளார் ஜூலி. இதற்காக ஈ.சி.ஆர். சாலையில் வார இறுதி நாட்களில் தன் நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.