Skip to main content

காதலன் மீது மோசடி புகார்! பிக்பாஸ் ஜூலி அதிரடி!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Fraud complaint against boyfriend! Big Boss Julie Action!

 

ஜல்லிக்கட்டு போராட்டங்களில் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. பிக்பாஸில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் மூலம் மேலும் புகழ் வெளிச்சம் அவர் மீது பரவியது. அதனைத் தொடர்ந்து சினிமாவிலும், சின்னத்திரையிலும் நடித்தார். பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துவருகிறார் ஜூலி. 

 

இந்தச் சூழலில், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் ஜூலி. அந்தப் புகாரில், ‘அமைந்தகரையைச் சேர்ந்த மனிஷ், தனியார் சலூன் கடை ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது. 2017 முதல் இருவரும் நெருக்கமாக வாழ்ந்துவந்தோம்.

 

நான்கு ஆண்டுகால காதல் வாழ்க்கையில், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்தார். அந்த நம்பிக்கையின் பேரில் இருசக்கர வாகனம், 2 பவுன் தங்கச் சங்கிலி என கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை மனிஷுக்கு கொடுத்திருக்கிறேன்.

 

இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம், பெற்றோர்கள் இந்தக் காதலை ஏற்க மறுப்பதாகச் சொல்லி காதலை முறித்துக்கொண்டார். நாங்கள் காதலித்த காலத்தில் நடந்ததைச் சொல்லி, என்னிடம் பணம் கேட்டு தொடர்ச்சியாக தொல்லைக் கொடுத்துவருகிறார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால், என்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியும், பண மோசடியும் செய்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காதலன் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார் ஜூலி. 

 

இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...