ADVERTISEMENT

விஜய்யுடன் திடீர் சந்திப்பு... 'தளபதி 66' படத்தில் இணைகிறாரா யுவன்?

01:25 PM Dec 24, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதனைத்தொடர்ந்து இப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்யை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் 'தளபதி 66' படத்தில் தமனுக்கு பதிலாக யுவன் சங்கர் ராஜா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT