'Thalapathy 66'; The film crew released the new announcement

Advertisment

விஜய்,பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைப்பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் 'தளபதி 66' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷியாம் மற்றும் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.