vijay 66 new update out now

மாஸ்டர் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

சமீபத்தில், விஜய் நடிக்கும் தளபதி 66 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இயக்குநர்வம்சி பைடிபள்ளி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி 66 படத்தை பற்றி கூறியுள்ளார். அதில்," நடிகர் விஜய்யை சந்திக்க தயாரிப்பாளர் தில் ராஜு அப்பாயின்மென்ட் வாங்கி கொடுத்தார். அதன் பின் அவரை சந்தித்து கதையை கூறினேன். பின் பொறுமையாக கதையை கேட்ட விஜய் இறுதியில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இத்திரைப்படம் கண்டிப்பாக அரசியல் படமாக இருக்காது. எமோஷனல் கலந்த கமர்ஷியல்படமாக இருக்கும். தளபதி 66 திரைப்படம் 'தோழா' படத்தை போல தமிழ் படம் தான், தெலுங்கிலும் வெளியாகிறது " என தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் கதாநாயகி குறித்தகேள்விக்கு, இன்னும் யார் என்று இறுதி செய்யப்படவில்லை அதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார்.