thalapathy 66 most expensive film vijay career

Advertisment

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="72510bcd-08ce-42a8-8977-7c31bee7aeca" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/velan-article-inside_15.jpg" />

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 66' படம் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இது வரைவிஜய் நடிப்பில் வெளியான படங்களைவிட இப்படத்தின் பட்ஜெட் மதிப்பு அதிகம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும்இதற்கானபணிகளை படக்குழு தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி புத்தாண்டை முன்னிட்டு 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலும், பொங்கலை முன்னிட்டு 'தளபதி 66' படம் குறித்த முக்கிய அப்டேட்டும் வெளியாகும் என கூறப்படுகிறது.