/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thaman.jpg)
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், 'தளபதி 66' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய், வம்சி இருவரது கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 66’ படத்திற்கு தமன்இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இசையமைப்பாளர் தமன் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)