Skip to main content

கமலின் பிறந்தநாள் ட்ரீட்... இணையத்தை கலக்கும் 'விக்ரம்' அப்டேட்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

vikram movie new update out now

 

மாஸ்டர் படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில்,  அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில்  ஆகிய மூவரும் உள்ள போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் பார்வை குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த ட்விட்டர் பதிவில், வரும் நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ( 6.11.2021) மாலை 6 மணிக்கு விக்ரம் படத்தின் முதல் பார்வை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.அத்துடன் படத்தின் போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

சமீபத்தில், விக்ரம் படக்குழு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்