ADVERTISEMENT

'தமிழ் ராக்கர்ஸ்' ; புதிய அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்

05:19 PM Jul 04, 2022 | kavidhasan@nak…


ADVERTISEMENT

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'ஏவிஎம் புரடக்சன்ஸ்' தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார். மேலும் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு விகாஸ் படிசா என்பவர் இசையமைக்கிறார்.

ADVERTISEMENT



'தமிழ் ராக்கர்ஸ்' தொடரின் டீசர் நேற்று (03.07.2022) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த தொடரின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என அருண் விஜய், வாணி போஜன் ஆகியோர் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் தமிழ்நாடு காவல் துறை அதிகாரி 'ருத்ரா'-வின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT