Skip to main content

"மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எனது படம் வெளியாகிறது" - ரிலீஸ் தேதியை வெளியிட்ட அருண் விஜய் மகிழ்ச்சி

 

arun vijay border release date announced

 

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 'யானை' படம் திரையரங்கிலும் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ் சில தினங்களுக்கு முன்பு ஓடிடியிலும் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'சினம்' படம் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே அருண் விஜய் மற்றும் இயக்குநர் அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் ரெஜினா கெசண்டரா மற்றும் ஸ்டீபி பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.  

 

இந்நிலையில் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எனது படம் ‘பார்டர்’ விரைவில் வெளியாவதில் மகிழ்ச்சி" என குறிப்பிட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்