/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/83_33.jpg)
அருண் விஜய் மற்றும் இயக்குநர் அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் ரெஜினா கெசண்டரா மற்றும் ஸ்டீபி பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படம் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத்தெரிவித்த அருண் விஜய், "மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எனது படம் ‘பார்டர்’ வெளியாவதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சில காரணத்தால் இப்படம் வெளியாகாமல் போனது.
இந்த நிலையில் ‘பார்டர்’ படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. அதோடு புது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)