Arivazhagan directing arunvijay staring 'TamilRockerz' web series trailer released

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'ஏவிஎம் புரடக்சன்ஸ்' தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார். மேலும் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு விகாஸ் படிசா என்பவர் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த தொடரின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடும் ஒரு கும்பலைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். இந்த வெப் சீரிஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment