ADVERTISEMENT

''இதே கேள்வி ஏன் ஒரு நடிகரிடம் கேட்கப்படுவதில்லை'' - தமன்னா கேள்வி!

03:06 PM May 19, 2020 | santhosh

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் திரையுலகமும் இதனால் முடங்கியுள்ள நிலையில் நடிகர், நடிகையர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். மேலும் கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என நடிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கைவசம் தட்ஸ் மகாலட்சுமி படம் மட்டும் வைத்திருக்கும் நடிகை தமன்னாவை நடிகர் ரவிதேஜாவின் அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டு தயாரிப்பு தரப்பு அணுகியதாகவும், அதற்கு அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இதற்கு தற்போது நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார். அதில்...

ADVERTISEMENT


''கடந்த பிப்ரவரி மாதம் தயாரிப்பு தரப்பு என்னை அணுகியபோது துரதிர்ஷ்டவசமாக சர்வதேச அளவில் கரோனா நெருக்கடி அதிகமானதால் தயாரிப்பு தரப்பே மேற்கொண்டு பேச்சுவார்த்தையை நிறுத்தியது. எனது சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் எப்போதும் தொழில்முறை கண்ணியத்தை காத்து வருகிறேன். இதுபோன்ற கற்பனையான கதைகளில் உண்மையில்லை. ரவிதேஜாவிடம் எனக்கிருக்கும் நல்ல நட்பை வைத்துப் பார்த்தால் அவர் படத்தை நான் ஏன் நிராகரிக்க வேண்டும். மேலும் சம்பளம் என்று வரும்போது அது அந்தந்த நடிகரின் தனிப்பட்ட முடிவு. அவரது மதிப்பை தீர்மானிப்பதும், கொடுக்கும் சம்பளத்துக்கு சமரசம் செய்து கொள்வதும், செய்யாமல் போவதும் அவரவர் விருப்பம். ஒரு நடிகை எப்போதுமே அவரது சம்பளத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற ஒருதலைப்பட்சமான எண்ணங்களை நாம் அழிக்க வேண்டும். இதே கேள்விகள் ஏன் ஒரு நடிகரிடம் கேட்கப்படுவதில்லை. துறையில் ஒருவராக நாங்களும் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளோம்'' என கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT