ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மிகப் பிரமாண்டமாகத் துவங்குகிறது. இதன் துவக்க விழாவில் டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவர்களோடு நடிகைகள் ராஷ்மிகா மற்றும் தமன்னா ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடவுள்ளனர். அதற்காக நடனப்பயிற்சி மேற்கொண்டுள்ள ராஷ்மிகா மற்றும் தமன்னா அதைப் பற்றி பல்வறு விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதனால் துவக்க விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்ள ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
முதல் போட்டியாக நான்கு முறை கப் அடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன.