Tamannaah wishes legend movie team and arul saravanan

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தி லெஜண்ட் படம் வெற்றிபெற நடிகை தமன்னா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சரவணன் சாரும், நானும் சேர்ந்து நிறைய விளம்பரங்கள் செய்திருக்கிறோம். நடிகராக வேண்டும் என்ற அவரின் எண்ணம் இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் பண்ணியிருக்கார். இவர்கள் இருவரும் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவர்கள். கண்டிப்பாக இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பாருங்கள்” என்று கூறியுள்ளார்.