tamanna

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கடந்த மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது ஓடிடியில் இவரது நடிப்பில் உருவான சீரிஸ் ஒன்று வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸின் புரொமோஷனில் கலந்துகொண்ட தமன்னா, கரோனாவால் பாதிக்கப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisment

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தமன்னா பகிர்ந்த புகைப்படத்தில் குண்டாக இருந்தார். இதனை சமூக வலைதளத்தில் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டதற்கு, “மருத்துவ சிகிச்சையின் போது அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொண்டதால் நான் குண்டானேன். அந்த புகைப்படத்தை நான் பகிர்ந்தேன். ஆனால் சமூக ஊடகங்களில் மக்கள் என்னை குண்டாகிவிட்டதாகக் கூறி விமர்சனம் செய்தார்கள். ஒருவர் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை புரிந்துகொள்ளாமல் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் ஆட்கள்தான் அதிகம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்.