விஷால் - சுந்தர் சி கூட்டணியில், தமன்னா நாயகியாக நடித்த 'ஆக்‌ஷன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை தமன்னா இப்படம் குறித்து பேசியபோது.....

Advertisment

tamannaah

''ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்து வருகிறீர்கள். அதேபோல் இந்த படத்திலும் இருக்கும். இயக்குநர் சுந்தர்.சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று கூட தெரியாது. இன்னொரு முறை அவருடன் பணிபுரிய மிகவும் விருப்பமாக இருக்கிறேன். பாகுபலி படம் போல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமொன்றில் நடிக்க ஆவலாக இருந்தேன். அந்த கனவை 'ஆக்‌ஷன்' படத்தின் மூலம் சுந்தர்.சி நிறைவேற்றியுள்ளார். மற்ற படங்களைவிட இப்படத்தில் தனித்தன்மையாக நடித்த அனுபவம் புதுமையாக இருந்தது.

cc

Advertisment

ஏனென்றால், படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருப்பதால் வசனங்கள் கொண்ட பேப்பர் எதுவும் பெரும்பாலும் இருக்காது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அந்த இடத்திற்கு செல்லுங்கள். இந்த இடத்தில் நில்லுங்கள். என்று தான் சூழ்நிலை இருக்கும். அனைத்து சண்டைக் காட்சிகளிலும் விஷாலுக்கு பின்னால்தான் நிற்பேன். அவர் எப்போது எங்கு குதிப்பார், எங்கு விழுவார் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருக்கும். இருந்தும் அதையெல்லாம் தாண்டி விஷாலுடன் நடித்ததில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. விஷாலுக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி'' என்றார்.