Skip to main content

சம்பளம் தராமல் இழுத்து அடிக்கும் ரஜினி படக்குழு- ட்விட்டரில் புலம்பும் பிரபலம்

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

2.0 படத்தில் சப் டைட்டில் எழுதியதற்கு இன்னும் எனக்கு சம்பளம் தரவில்லை என்று பிரபல சப் டைட்டில் எழுத்தாளர் ரேக்ஸ் ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 

reks

 

 

எந்திரன் படத்தின் இரண்டாம பாகமான 2.0 படம் பல வருட போராட்டத்திற்கு பிறகு சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது. இதன்பின் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம், 3டி, சத்தம் அனைத்தும் செமையாக இருந்தது என்று இப்படத்திற்கு ஒரு கலவையான விமர்சனமே கிடைத்தது. ரஜினி, அக்‌ஷய் குமார் என இரு பெரும் நடிகர்கள் நடித்திருந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தொட்டது. தற்போது சீனாவில் மிகப்பெரிய அளவில் 2.0 படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
 

இந்நிலையில் இப்படத்தில் சப்டைட்டில் எழுத்தாளராக பணிபுரிந்த ரேக்ஸ், என்னுடைய முழு சம்பளத்தையும் தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  “படம் வெளியாகி பத்து மாதங்கள் வரை அவர்களுக்கான நேரத்தை நான் கொடுத்தேன் அதன்பின்னும் அவர்கள் எனக்கு சேரவேண்டிய பாக்கிய தரமுன் வரவில்லை. இதனையடுத்து நானே தயாரிப்பு நிறுவனத்திற்கு போன், மெசேஜ் மற்றும் மெயிலின் மூலம் தெரிவித்துள்ளேன் ஆனால் அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். 
 

மேலும் அந்த பதிவில்,  “எந்திரன் படத்திலேயே பணிபுரிந்ததற்கு இன்னும் முழு சம்பளம் கொடுக்கவில்லை. அதை சரிபோகுது என்று விட்டுவிட்டேன். மீண்டும் இப்படி ஒரு செயல் நடக்கிறது” என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.