ADVERTISEMENT

ரஜினியுடன் நடிக்கும் சிவகார்த்திகேயன் ?

07:20 PM Jun 15, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த், நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளிவந்தது. மேலும் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனை சிவ ராஜ்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தில் சிவகார்த்திகேயன், ரஜினியின் இளமை வயது கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் 'தலைவர் 169' படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இது தொடர்பாக படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் எது உண்மை என்பது தெரிய வரும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT