/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/837_1.jpg)
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்திரைப்படம் கலவையான விமர்சனங்களைபெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை இயக்கவுள்ளதாக பீஸ்ட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினிகாந்த் 'தலைவர் 169' படத்தின் இயக்குநரைமாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தனது அடுத்த படத்தின் இயக்குநர்நெல்சன் திலீப்குமார்தான் என ரஜினிகாந்த் உறுதி செய்தார்.இதையடுத்து இப்படத்தில்பிரபல கன்னட நடிகர்சிவராஜ் குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும்கூறப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தின்வேலைகளில் தனது குழுவுடன் ஈடுபட்டுள்ளார். படத்தின்திரைக்கதையில் ரஜினிகாந்த் சிறு மாற்றம் செய்ய சொல்லி உள்ளதாகவும், இயக்குநர் நெல்சனுக்கு சில ஆலோசனைகளை வழங்க இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரைதலைவர் 169 படத்தில் இணைத்து உள்ளதாகவும்கூறப்படுகிறது.மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்கூட கே.எஸ் ரவிக்குமார் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர்கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா, முத்து உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)