rajini in cuddalore for jailer shooting videos goes viral on social media

Advertisment

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் இப்படத்தில் ஜெயிலர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ரசிகர்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ரசிகர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.