vadivelu joining rajinikanth thalaivar169 movie

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார்இயக்கும்புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். தற்காலிகமாக 'தலைவர் 169'என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்துபடக்குழு வடிவேலுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வடிவேலு, ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன், முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் சந்திரமுகி படத்தில் ரஜினி வடிவேலுவின் காமெடி கெமிஸ்ட்ரி ரசிகர்களைவெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது மீண்டும் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment