Skip to main content

ரஜினியுடன் இணையும் பிரபல கன்னட நடிகர் ; வெளியான புதிய தகவல்

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Famous Kannada actor who joins Rajini's 'Thalaivar 169' movie

 

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அடுத்ததாக மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தலைவர் 169' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படக்குழு நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. 

 

இந்நிலையில் 'தலைவர் 169' படத்தில் புகழ் பெற்ற கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சிவ ராஜ்குமார். கன்னடத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களின் அண்ணன் ஆவார். இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழ் மற்றும் கன்னடம் மொழிகளில் புகழ் பெற்ற இரண்டு மெகா ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தமிழ்நாடு மற்றும் கன்னடத்தில் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

சிவராஜ்குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க கோரிக்கை

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP's request to Election Commission against Shivarajkumar

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா, கர்நாடாகாவில் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவரை ஆதரித்து சிவராஜ்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடியும்வரை சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் கோரிக்கை வைத்துள்ளது. பாஜக ஓபிசி மோர்ச்சா பிரிவின் கர்நாடக மாநிலத் தலைவர் ரகு, எழுதியிருந்த கடிதத்தில், “கர்நாடாகாவில் ஒரு முக்கிய நபராக இருக்கும் சிவராஜ்குமார், தற்போது காங்கிரஸ் கட்சிக்காக மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சினிமா மூலம் மக்கள் மத்தியில் பொதுவான ஆளுமை என்ற பெயரை பெற்றுள்ளார். ஜனநாயக முறையில், அவரது உரிமையை நாங்கள் மதிக்கிறோம். 

அதே சமயம், தேர்தல் நேரத்தில் தேவையற்ற ஆதாயங்கள் அல்லது செல்வாக்கைத் தடுப்பது மற்றும் சமநிலையைப் பராமரிக்க வேண்டியது அவசியம். அவரது குறிப்பிடத்தக்க செல்வாக்கு மற்றும் பிரபலத்தை கருத்தில் கொண்டு, திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவைகளில் தேர்தல் முடியும்வரை சிவராஜ்குமார் நடித்த படங்கள், விளம்பரங்களை ஒளிப்பரப்பபடுவதை தடை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.