ADVERTISEMENT

“இதெல்லாம் ஒரு ரோல், இதுக்காக என்ன கூப்பிட்டு இருக்கீங்க?" - தனுஷிடம் கோபித்துக்கொண்ட சரண்யா பொன்வண்ணன்!

04:14 PM Mar 07, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் விஐபி படம் குறித்து சரண்யா பொன்வண்ணன் பேசிய பகுதி...

“இதெல்லாம் ஒரு ரோல் இதுக்காக என்ன நடிக்கவேற கூப்பிட்டு இருக்கீங்க என்று சொல்வேன். டெய்லி தனுஷிடம், எதுக்கு இந்த படத்துல நடிக்க கூப்டீங்க, எதுக்காக நடிக்க அழைத்தீர்கள் என்று கேட்பேன். அதற்கு தனுஷ் ”வெயிட் பண்ணுங்க மேடம் படம் முடிஞ்சதும் பாருங்க” என்றார். ”சும்மா இருங்க தனுஷ், இந்த ரோல்க்கு நீங்க அழைத்திருக்கவே கூடாது” என்று சொன்னேன். வீட்டுக்கு வந்து கதை சொல்றேன், எனக்கு சமைத்துக் கொடுங்கள் என்றெல்லாம் கேட்டார். படத்தில் எனக்கென்று தனியாக பாடல் ஒன்று இருப்பதாகவும் சொன்னார். ஆனால், ஷூட்டிங் போனால் எனக்குப் பெரிதாக சீன் இருப்பதுபோலத் தெரியவில்லை. நான் நடிப்பது போன்றும் தெரியவில்லை. இதுலாம் ஒரு படமா என்ற அளவிற்கு முதலில் யோசித்து நடித்தேன். நடிக்கும்போது ஒன்னும் இல்லை என்பதுபோல தோன்றியது. ஏன் அப்படி தோன்றியது என்பதுகூட தெரியவில்லை.

படத்தில் நடித்து முடித்து டப்பிங் பார்க்கும்போது, இதெல்லாம் நான் நடிச்சேனா, ஓ இன்னும் சீன் இருக்கா என்று கேட்கிறேன். அப்போதுதான் புரிந்தது அந்தளவிற்கு ஃப்ரீயாக ஷூட்டில் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் எனக்கு நடித்தது கூட தெரியாத அளவிற்கு இருந்திருக்கிறது. டப்பிங் முடிந்தவுடன் தனுஷ், ”இப்போவாது நான் சொன்னதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார். மேலும் டப்பிங்கில் தனுஷிடம் ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன். எப்போதும் டப்பிங் பேசும்போது லிப் சவுண்ட், உச் என்றெல்லாம் சவுண்ட் வந்தால் திரும்பி அது வராமல் பேச சொல்வார்கள். ஆனால், தனுஷ் அந்த சவுண்ட் வந்தாலும் பரவாயில்லை, அதுதான் நேச்சுரல், இருக்கட்டும் என்பார். கஷ்டமே இல்லாமல் டப்பிங்கும் செய்து, கஷ்டமே இல்லாமல் படமும் நடித்தேன் என்றால் அது விஐபிதான். அது அவ்வளவு பெரிய ஹிட்டாகிவிட்டது. அதை ஈஸி கேக் வாக் என்று சொல்லுவேன். அந்த படத்தின் முழு கிரெட்டையும் நான் தனுஷுக்குதான் கொடுப்பேன்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT