/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhanush-atrangi-re.jpg)
தனுஷை பாலிவுட்டில் ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல். ராய். இந்த படம் தனுஷிற்கு பெரும் வெற்றியை பாலிவுட்டில் தேடி தந்தது. இதன்பின் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்திருந்தார். இவ்விரண்டு படங்களுக்கு பிறகு தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததனுஷ், தற்போது மீண்டும் பாலிவுட்டில் களமிறங்குகிறார்.
ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இதில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். தனுஷ்,சாரா அலிகான் காட்சிகள் மதுரையில் எடுக்கப்பட இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அக்டோபர் மாதம் மதுரையில் இவர்களின் பகுதி ஷூட்டிங் நடைபெறும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இதனிடையே, தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் டிம்பிள் ஹயாதி. இவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)