அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா பல வருட தடைகளை உடைத்து வெளியாகியுள்ளது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

asuran

இந்நிலையில் அசுரன் படத்தின் ஷூட்டிங்கின்போதே பட்டாஸ் என்ற படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தார். அசுரன் படம் முடிந்தவுடன் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வந்தார். அங்கு அறுபது நாட்கள் ஒரே கட்டமாக நடைபெற்ற ஷூட்டிங்கில் நடித்து முடித்தார். இதன்பின் தமிழகம் திரும்பிய தனுஷ் பட்டாஸ் படத்தின் மீதி ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். சமீபத்தில்தான் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. படக்குழு மிகப்பெரிய கேக்கை வெட்டி அதை கொண்டாடியது. விரைவில் இப்படத்தின் டப்பிங் பணிகளில் தனுஷ் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

alt="iruttu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d75be47f-54c2-40d1-b9ab-351ee372ee75" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_22.jpg" />

Advertisment

இந்நிலையில் தனுஷ் கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்தார். அந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்க இருக்கிறார். கர்ணன் என அந்த படத்திற்கு பெயரிட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் திருநெல்வேலியிலேயே எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற டிசம்பர் இறுதியில் தொடங்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் ஃபிப்ரவரி வரை திருநெல்வேலி மாவடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.