Skip to main content

முழுக்க வெளிநாட்டில் உருவாகும் தனுஷ் படம்...

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. வருகிறா ஆகஸ்ட்டில் படம் வெளியாகலாம என எதிர்பார்க்கப்படுகிறது.
 

dhanush

 

 

இதன் இடைவேளையில் செந்தில்குமார் படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தனுஷின் டேட்டிற்காக ராட்சசன் இயக்குநர் ராம்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்க போகிறார்கள் என்று முன்பே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன. 
 

இதனையடுத்து செல்வராகவனும் தனுஷும் இணைந்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் என்றும் பேசப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷை வைத்து படம் இயக்குகிறார். அது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகும் படம் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்துதான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.
 

தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிறா ஆகஸ்ட் மாதம் லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படுவதாகவும். இதற்காக 60 நாட்கள் தனுஷ் தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“மத நல்லிணக்கம்; உண்மைச் சம்பவம்” - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
karthik subburaj praised aishwarya rajinikanth lal salaam

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டின் போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று (09.02.2024) இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்” எனக் குறிப்பிட்டு ரஜினி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனிடையே ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கு முன்பு கூடி பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் படத்தை வரவேற்றனர். மேலும் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடினர். 

இப்படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் பாராடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தலைவர் ரஜினிகாந்தை மொய்தீன் பாய்யாக பார்ப்பது சூப்பராக இருந்தது. நம்மிடையே மத நல்லிணக்கத்தின் அவசியத்தை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படக்குழு சொல்லியிருக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்” எனk குறிப்பிட்டுள்ளார்.