ADVERTISEMENT

'பாகுபலி' பிரபாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

01:45 PM Oct 23, 2020 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘சாஹோ' படத்தை தொடர்ந்து பிரபாஸ், ராதா கிருஷ்ணா இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸின் 20ஆவது படமான இந்தப் படத்தை, யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில், பிரபாஸிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

'ராதே ஷ்யாம்' அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. படத்தில் பிரபாஸின் புத்துணர்வு தரும் தோற்றம், ரசிகர்களுக்குப் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இந்நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால், அதை மேலும் இனிமையானதாக்கும் வகையில், படக்குழு படத்தின் மோஷன் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

அழகியல் ததும்பும் அடர்ந்த வனத்தின் ஊடே செல்லும் ரயில் பாதையில், சீறிப் பாயும் ரயிலை காட்சிப்படுத்தி அந்த மோஷன் வீடியோ தொடங்குகிறது. அப்படியே விரியும் காட்சிகள், அந்த ரயிலின் வெவ்வேறு பெட்டியில் பயணிக்கும் விக்ரமாதித்யா, பிரேரனாவின் மீது படர்கிறது. இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். விகர்மாதித்யா, பிரேரனாவின் அறிமுகக் காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ராதே ஷ்யாம், ஐரோப்பாவில் நடைபெறும் ஒரு மகத்தான காதல் காவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதிக்கு நாட்களாகும் என்பதால், இங்கே அரங்குகளை உருவாக்கி ஷூட்டிங்கை தொடங்கியுள்ளது படக்குழு. பிரம்மாண்டமான மருத்துவமனை, ஐரோப்பாவின் வீதிகள், பெரிய கப்பல் உள்ளிட்ட அரங்குகள் அமைத்தது படக்குழு. படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படம் வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT