radhe shyam movie raegaigal song released

Advertisment

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணர் கதாபாத்திரத்தில்நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘ராதேஷ்யாம்’படத்தின் மூன்றாவது பாடலான'ரேகைகள்..' பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மதன் கார்க்கிவரிகளில் ஜெயபிரகாஷ் பாடியுள்ள இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.