யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ள இப்படம் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் க்ளிம்பஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த க்ளிம்பஸ் வீடியோ காதலர்கள் மட்டுமின்றி பெரும் பாலான ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.