radhe shyam movie postponed

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராகநடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின்ரிலீஸ் தேதி தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கரோனாபரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் ஜனவரி 7 ஆம்தேதி வெளியாக இருந்த 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தின்ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்படுவதாகபடக்குழு அறிவித்துள்ளது.

Advertisment