Skip to main content

'ராதே ஷ்யாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 13/02/2021 | Edited on 14/02/2021
bfbfxb

 

‘சாஹோ' படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் 'ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அவரது 20ஆவது படமான இந்தப் படத்தை, யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில், பிரபாஸிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 'ராதே ஷ்யாம்' அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மோஷன் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

 

இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷ்யாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் வரும் ஜூலை 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்திலிருந்து வெளியான காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்