ADVERTISEMENT

"கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகிவிட்டேன்" - பாடலாசிரியர் விவேக்

03:24 PM Mar 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலரில் இடம்பெற்ற வசனங்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இப்படத்திற்கு பாடலாசிரியர் விவேக் வசனம் எழுதியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதை அவர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மாறன் படத்தில் ட்ரைலருக்கும், வசனத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் உணர்வுபூர்வமான கமர்ஷியல் படமாக இருக்கும். உங்களை போன்று நானும் மாறன் படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். மாறன் படத்தில் இடம் பெரும் வசனங்கள் நான் எழுதவில்லை உங்களது வாழ்த்துகள் அனைத்தும் எழுதியவரையே சாரும். படைப்பு சார்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாறன் படத்திலிருந்து நான் வெளியேறி விட்டேன். எனது முடிவை ஏற்றுக் கொண்ட படக்குழுவினருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல படங்களுக்கு வசனம் எழுதி வருவதாகவும், அதற்கு மாறன் தான் ஆரம்பப்புள்ளி என்றும் தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT