/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/223_6.jpg)
இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 11ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'மாறன்' படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில்சென்னையில் உள்ள மால்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பொழுது போக்கு இடங்களில் 'மாறன்' படத்தின் பாடலுக்கு நடனமாடி வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான 'மாறன்' படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)