dhanush starring maaran movie first song release date announced

இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாறன் படத்தில் பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷ் தெருக்குரல் அறிவுடன் இணைந்து பாடியுள்ள பொல்லாத உலகம் என்ற பாடல் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (26.1.2022)வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment