maaran movie first song goes viral

Advertisment

இயக்குநர்கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்உள்ளிட்ட பலர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன்இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடிந்துள்ள படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது

இந்நிலையில் படத்தின் முதல் பாடலானபொல்லாத உலகம் பாடலைபடக்குழு நேற்று (27.1.2022) வெளியிட்டுள்ளது.பாடலாசிரியர் விவேக் வரிகளில் நடிகர் தனுஷ் தெருக்குரல் அறிவுடன் இணைந்து பாடியுள்ள இப்பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இப்பாடலுக்கு ஸ்டெயிலாகநடனமாடியுள்ளதனுஷ் பாடலின் இறுதி வரைஃபுல் எனர்ஜியுடன் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.