ADVERTISEMENT

'ஜெயிலர்' படத்தின் புதிய அப்டேட்

05:37 PM Sep 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, பிரபல மலையாள நடிகர் விநாயகம் ஆகியோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ரஜினி ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு ஏற்றாற்போல் தீம் பாடலை அனிருத் வடிவமைத்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளில் வெவ்வேறு தீம் பாடல்களும் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT