/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1647.jpg)
'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
காலையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் சண்டை இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாககூறப்படுகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனத்தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)