rajinikantha jailer update released

Advertisment

இந்தியத் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத்திகழும் ரஜினிகாந்த் இன்று (12.12.2022) தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி ரஜினிகாந்த்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ரஜினி நடித்து வரும் 'ஜெயிலர்' படக்குழு ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத்தெரிவித்துள்ள படக்குழு அந்த கதாபாத்திரத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு வீட்டில் பக்காவாக ரெடியாகும் ரஜினி வெளியில் வந்து ஒரு கத்தியைக் கையில் எடுக்கிறார். இதனைப் பார்க்கையில்படத்தில் வரும்பழிவாங்கும்காட்சி போல் தெரிகிறது.

ரஜினியின் பிறந்தநாளன்று 'ஜெயிலர்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின்படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment