jailer fans review

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலபேர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. அதற்கு முன்னரே கர்நாடகாஉள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 6 மணி முதல் இருந்தே தொடங்கியுள்ளது.

Advertisment

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு,திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். மேலும் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்த கொண்டாட்டம் இந்தியாவைத்தாண்டிகனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்களுடன் தனுஷ், அனிருத், ரம்யா கிருஷ்ணன், பாடலாசிரியர் சூப்பர் சுபு உள்ளிட்டோர் திரையரங்குகளில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மற்ற மாநிலங்களில் படம் பார்த்துவிட்ட ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். அதாவது, முதல் பாகம் மாஸாக இருப்பதாகவும் இரண்டாம் பாகம் க்ளாஸாக இருப்பதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.