jailer telugu event cancelled

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisment

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisment

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் 'காவாலா' மற்றும் 'ஹுக்கும்' (Hukum) பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இன்று காவாலா பாடலின் தெலுங்கு பதிப்பான 'காவாலி' பாடல் ஒரு நிகழ்ச்சி மூலம் வெளியிடத்திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி தெலுங்கானா சிஎம்ஆர் கல்லூரியில் நடைபெற இருந்த நிலையில், மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் யூட்யூபில் இன்று மாலை 4 மணிக்கு காவாலி பாடல் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நிகழ்ச்சியைப் பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள், படக்குழுவின் திடீர் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனிடையே தமிழ் பதிப்பின் மூன்றாவது பாடலான 'ஜூஜூபி'(Jujubee) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

Advertisment